யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை - பிரதமர் ரணில்
ஐ.நா.அறிக்கையினை பூதாகரமாக காண்பித்து அதனால் இனவாதத்தை கட்டவிழ்த் துவிட எத்தனிக்கும் தரப்பினர் அண்மை யில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பிலான அறிக்கையில் ஒருபோதும் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம் பெற் றது என்றோ சர்வதேச விசாரணை வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை.
மாறாக யுத்தக் குற்றம் இடம் பெற்றதா என்பது குறித்து உள்நாட்டு பொறிமுறை அமைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே பணிப்புரை விடுக்கப்பட்டது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து நாடு தொடர்பில் சர்வதேச விசாரணை அறிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டபோதும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் போவதாக அறிவித்த போதும் எதிர்த்தவர்களே இன்றும் பொய் விஷமத்தனமான கருத்துக்களை சமூகத்தில் பரவச் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
என்மீது யார் சேறு பூசுகிறார் என்பது தொடர்பில் எனக்கு கவலை இல்லை. ஆனால் நாட்டின் சுயாதீன தன்மையின் மீது கைவைக்க நான் எவருக்கும் இடமளிக்கமாட்டேன். அதனாலேயே தேசிய அரசாங்கம் அமைத்து உள்நாட்டு பொறிமுறைக்கும் வழி செய்தோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
கொழும்பில் ஜே.ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் இடம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 109 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கடந்த 14ஆம் திகதி இலங்கையில் இடம் பெற்ற யுத்தக்குற்றம் தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டது. குறித்த அறிக்கை வெளியிடும் போது எந்த இடத்திலும் இலங்கையில் யுத்த குற்றம் இடம் பெற்றது என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லை. மாறாக யுத்த குற்றம் இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையில் ஆராய்ந்து பாருங்கள் என்றே பரிந்துரை செய்தது.
ஆனால் இதனை விளங்கிக் கொள்ளத சில தரப்பினர் முன்னாள் தலைவர்களை தண்டிக்கப்போகிறார்கள் என்ற விதத்தில் பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர் அதேவேளை அவர்களது குற்றம் நிரூபனமானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஐ.நா. அறிக்கையை புதாகரமாக காண்பித்து இனவாதத்தை கட்டவிழ்த்து விட முன்னெடுக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1984,1985 ஆம் ஆண்டுகளில் யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் நாட்டில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறிய போதும் மேற்குறித்த தரப்பினரே அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அது மட்டுமன்றி குறித்த தரப்பு இந்து-லங்கா ஒப்பந்தம் தொடர்பில்
பேச்சுவார்த்தை இடம் பெற்றபோதும் எதிர்த்தது. ஆனால் இன்று அதனாலேயே எமது நாட்டை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
இவை அனைத்தும் எமக்கு சேறு பூசுவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள். என்மீது எவர் சேறுபுசினாலும் அதற்காக நாம் கவலையடையப்போவதில்லை. நாட்டின் மீது சேறு புசப்படாமல் காப்பதே எமது தேவையாகும். அதனால் தான் சர்வதேச விசாரணையை தற்போது உள்நாட்டு பெறிமுறையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்காகவே தேசிய அரசாங்கமும் அமைத்தோம்.
மறுபுறம் தேசிய அரசாங்கம் குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ளது. தேசிய அரசாங்கம் என்ற கலாசாரத்தை உருவாக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினாலேயே முதலில் முன்வைக்கபட்டது. அதன் பிரகாரம் 1960 இல் இடம் பெற்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி 50 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. சுதந்திர கட்சி 46 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. ஆனால் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எவருக்கும் இருக்கவில்லை அதன் போது அதிக ஆசனம் பெற்ற கட்சி என்ற வகையில் டட்ளி சேனாநாயக்க பிரதமராக பதவியேற்றார்.
ஆனால் அக்கிராசனம் பற்றிய பேச்சு எழுந்த போது அக்கிராசனம் பெறும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெறும்பான்மை பலம் இருக்கவில்லை. அப்போது டட்ளி பதவி விலகுவதாக கூறினார் அவரை வேண்டாம் என தடுத்த ஜே.ஆர் மற்றய தரப்பை இணைத்து ஆடசி அமைக்க ஒருமாத கால அவகாசம் கோரினார் ஆனால் அதன்போது கட்சியில் பெரும்பாளானோர் ஜே.ஆர.ஜயவர்தனவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் பாராளுமன்றம் களைக்கப்பட்டு தேர்தல் இடம் பெற்றபோது உடைந்த கட்சிகள் ஒன்றிணைந்து சுதந்திர கட்சியாக சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் போட்டியிட்டதுடன் வெற்றியும் கண்டது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்தது.இந்நிலையில் 1967 ஆம் ஆண்ட மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் போது இதன் போது வெற்றி கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சி.பி.த சில்வாவை பிரதமராக செயற்படுமாறு பணித்தது 2 தடவைகளும் அவர் மறுப்பு தெரிவித்த அதேவேளை டட்ளியை ஆட்சியமைக்க கோரினார் ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பத்தின் போதும் ஜே.ஆர்.ஜயவர்தன தேசிய அரசாங்கம் என்ற நோக்கத்திலேயே அவர் செயற்பட்டார்.இதன் பின்னர் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சி.பி.த.சில்வாவை சபாநாயகராக கடமையாற்றவும் ஜே.ஆர்.பணித்தார்.அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த வரலாற்றை அறிந்தவர்கள் தேசிய அரசாங்கம் அமைத்தமை தொடர்பில் குழப்பம் அடைய வாய்ப்பில்லை.
எவ்வாறாயினும் அன்று பல தடவை முயற்சித்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்.ஜயவர்தனவுக்கு கிடைக்காத வாய்ப்பு தேசிய அரசாங்கமாக செயற்பட எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிடைத்துள்ளது. அதனை கொண்டு நாட்டின் வலுவான அபிவிருத்தியை ஒருபடி முன்நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி அட்சி செய்யும் உத்தியை நன்கு அறிந்துள்ளது அதன்படி சிறந்த ஆட்சியொன்றினை முன்னெடுத்துச் செல்ல எம்மால் முடியும்.