Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனே பொருத்தமானவர் - ஹசன் அலி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலைவர் சம்­பந்தன் அர­சியல் சாணக்­கியம் நிறைந்த ஒரு சிரேஷ்ட அர­சியல் தலை­வ­ராவார். 

எனவே சம்­பந்தன் போன்ற ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது நல்­ல­தொரு விட­ய­மாகும். அதேபோல் சம்­பந்­தனே எதிர்க்­கட்சி பத­விக்கு பொருத்­த­மா­னவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி தெரி­வித்தார்.

எனினும் எதிர்க்­கட்­சி­யா­கிய செயற்­பட விரும்­பு­ப­வர்கள் கலந்­தா­லோ­சித்து ஒரு தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இன்று பாரா­ளு­மன்றம் கூடு­கின்ற நிலையில் எதிர்க்கட்சி பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்டை வின­விய போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

புதிய பாரா­ளு­மன்றம் நாளை(இன்று) கூடு­கின்ற நிலையில் பல முக்­கிய அம்­சங்­களை எதிர்­பார்க்க முடியும். குறிப்­பாக இந்த பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்­துள்­ள­ளது. இந் நிலையில் அதற்­கான விடை நாளை(இன்று) கிடைக்கும் என எதிர்­பார்க்­கின்றோம். எனினும் இப்­போ­தி­ருக்கும் நிலையில் பல­மான எதிர்க்­கட்­சியை அமைக்­க­வேண்­டிய தேவை உள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஒரு சில­ருக்கு எதிர்க்­கட்சி பதவி வழங்­கப்­பட வேண்டும் என கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் யாரை நிய­மிப்­பது என்­பதை நாம் தெரி­விக்க முடி­யாது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் அர­சியல் சாணக்­கியம் நிறைந்த ஒரு சிரேஷ்ட அர­சியல் வாதி­யாவார். அவ­ரைப்­போன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் செயற்­ப­டு­வது மிகவும் ஆரோக்­கி­ய­மான அதேபோல் அவ­சி­ய­மான விட­ய­மாகும். ஆகவே சம்­பந்தன் போன்ற ஒருவர் எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது நல்­ல­தொரு விட­ய­மாகும். அதேபோல் சம்­பந்­தனே எதிர்க்­கட்சி பத­விக்கு பொருத்­த­மா­னவர் என்ற தனிப்­பட்ட கருத்து எம்­மிடம் உள்­ளது.

எனினும் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­ட­வி­ருக்கும் நபர்­களே யார் எதிர்க்­கட்சி தலைவர் யார் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­வது என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும். இப்­போது ஒரு சிலர் தாம் எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அம­ர­வி­ருப்­ப­தாக தெரி­வித்து வரு­கின்­றனர். அதேபோல் எதிர்க்­கட்சி பதவி தமக்குக் கிடைக்க வேண்டும் என்றும் தத்­த­மது கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­ட­வி­ருப்­ப­வர்கள் கலந்­து­ரை­யாடி தமது தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

அதேபோல் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய சபா­நா­யகர் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்­பதை தெரிவு செய்வார். ஆளும் தரப்­பினர் எதிர்க்­கட்­சியை நிய­மிக்க முடி­யாது. ஆகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அரசாங்கத்துடன் செயற்படுவதால் எம்மால் ஸ்திரமான கருத்தினை தெரிவிக்க முடியாது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.