உள்ளக விசாரணைகளுக்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியம்
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை நிறுவுவதற்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றிற்கு பதிலாக உள்ளக விசாரணைகளை நடாத்த சிவில் அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மாறாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்இ புனரமைத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் ஆகியனவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக யுத்தக் குற்றச் செயல்களை விடவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகஇ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒப்புக்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ம்ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து இவ்வாறு கூட்டறிக்கை வெளியிட்ட போது குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் மஹிந்த ராபஜக்ஸவே ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அப்போதைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க 11அம்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதிமொழி வழங்கியிருந்ததாகவும் இவை எவற்றையும் அப்போதைய அரசாங்கம் கருத்திற்கொள்ளாமையே சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.