ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்க ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக கல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்த போது இந்தியாவின் இந்த முடிவு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரியப்படுத்தியதாக, மூத்த இந்திய அதிகாரிகள் கல்கத்தா ரெலிகிராப் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன – நரேந்திர மோடி சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப், “எமது நிலைப்பாடு தெளிவானது. நாம் நீதியின் பக்கம் நிற்கிறோம். அதேவேளை,இலங்கையின் இறைமையையும் மதிக்கிறோம்.
இலங்கைஅரசாங்கத்துக்கு இணக்கமான வகையில் நாங்களும் அதனுடன் இணங்கிக் கொள்கிறோம்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.