Breaking News

எதிர்க்கட்சி தலைவராகின்றார் சம்பந்தன் ? பேச்சாளரானார் சுமந்திரன்!(காணொளி)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்
குழுத் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னரே சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என பேரினவாத சிங்கள கட்சி உறுப்பினர்களே கோரிக்கை விடுத்துள்ளதோடு கடும் போக்கான சிங்களக் கட்சிகளுக்கும் இது விடயத்தில் அமைதி காக்குமாறு ஜனாதிபதியூடாக உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவாகியுள்ளதோடு கட்சியின் கொறடாவாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டும் என்றும், இந்த கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதே வேளை சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதன் ஊடாக தமிழர்களுக்கான அரசியல் உரிமை எவ்வளவிற்கு சிங்களம் பகிர்ந்து கொடுத்திருக்கிறது எனபதனை சிறிலங்காவின் சின்னக்கதிர்காமர் ஊடாக அமெரிக்கா அற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பரப்புரை செய்வதனூடாக எதிர்வரும் ஜெனிவா அமர்வுகளிலிருந்தும் ஐ.நா விசாரணையிலிருந்தும் பாதுகாக்கலாம் என சம்பந்தன் தரப்பினால் சந்திரிக்காவிற்றும் ரணிலுக்கும் பக்குவமாக எடுத்து காட்டியிருப்பதாக தமிழரசு கட்சி உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய பதிவு