இலங்கை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பான் கீ மூன்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இந்த அறிக்கையின் பரிந்துரைகள், இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப உண்மையான நம்பகமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், நிலையான அமைதி, உறுதித்தன்மை, மனித உரிமைகளை மதிக்கின்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மோதல் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக எல்லா பங்காளர்களுடனும், பரந்தளவில் ஆலோசித்து பொறிமுறைகளை வடிவமைக்க வேண்டும்.” என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.