Breaking News

விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம்: அமொிக்காவும் தீர்மானத்தில் வலியுறுத்தும்

இலங்கையின் முள்ளிவாய்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிபகள் அவசியம் என்பதை அமெரிக்கா வலியுறுத்தும் என கூறப்படுகின்றது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு சார்பாக தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி முன்வைக்கவுள்ளது.

இந்த நிலையில் அந்த தீர்மானத்தின் முதலாவது வரைபு இலங்கை அரசாங்கத்திடம் நேற்று முன்தினம் கையளித்துள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமெரிக்கா தனது தீர்மானம் தொடர்பாக விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வரைபில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சுதந்திரமான வழக்கு தொடுநர்கள் விசாரணையின்போது சமூகமளித்திருக்க வேண்டும் என்று வலிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமை பேரவை ஆணையாளரின் பரிந்துரைக்கு அமைவாக அமெரிக்காவின் தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

தீர்மானத்தின் முதலாவது வரைபில் உள்ள நான்கு வாசகங்கள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கும் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடலில் ஜெனீவாவில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் பங்குகொள்வர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.