Breaking News

நிரந்­தர அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­த­வேண்டும்! - சம்­பந்தன் வலி­யு­றுத்து

தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை காண்­ப­தற்கு அனைத்து தரப்­பி­ னரும் ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் கூறப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டி­ய அவர்,

பழைய அர­சாங்­கத்தின் போக்­கிற்கு வித்­தி­யா­ச­மாக மனித உரிமை பேர­வையின் அறிக்­கையை புதிய அர­சாங்கம் வேறொரு வகையில் கையாள முனை­கின்­றமை விரும்­பத்­தக்­க­தா­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் குறித்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அலு­வக அறிக்கை தொடர்­பா­கவும், மனித உரிமை பேர­வையில் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆற்­றிய உரை தொடர்­பா­கவும் கருத்து வௌியி­டும்­போதே எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்­டங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்கை வௌியி­டப்­பட்­டுள்­ளது. ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசேன் இலங்கை தொடர்­பாக இரண்டு தட­வைகள் இக் கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றி­யி­ருக்­கின்றார். அதே­நேரம் இலங்­கையின் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பல்­வேறு விட­யங்கள் சம்­பந்­த­மாக நீண்ட உரை­யொன்றை ஆற்­றி­யி­ருக்­கின்றார்.

எம்­பொ­றுத்­த­வ­ரையில் இந்த நாட்டில் இடம்­பெற்ற விட­யங்கள் குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும். உண்­மையின் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான பரி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். கடந்த காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்­கு­ரி­ய­வா­றான உறு­தி­ய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

அத­ன­டிப்­ப­டையில் இந்த நாட்­டி­லி­லுள்ள அனைத்­தின மக்கள் மத்­தி­யிலும் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­த­ப­ட­வேண்டும். தமிழ் மக்கள் நீண்­ட­கா­ல­மாக எதிர்­நோக்­கி­வரும் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­மித்த இலங்­கைக்குள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகை­யி­லான நியா­ய­மான நிரந்­த­ர­மான நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது உறு­தி­யான நிலைப்­பா­டா­க­வுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே பழைய அர­சாங்­கத்தின் போக்­கிற்கு வித்­தி­யா­ச­மாக மனித உரிமை பேர­வையின் அறிக்­கையை புதிய அர­சாங்கம் வேறொரு வகையில் கையாள முனைகின்றமை விரும்பத்தக்கதாகவுள்ளது. 

எமது கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகளை ஒருமித்த இலங்கைக்குள் காண்பதற்காக அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். அதற்குரிய செயற்பாடுகளை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்