ஜெனீவா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
படைவீரர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றக்காட்டுக்களில் உண்மையில்லை போர் இடம்பெற்ற இறுதிக் காலப்பகுதியில் படைப்பிரிவுகளின் தளபதிகள் என்னுடைய உத்தரவுகளையே பின்பற்றினர். 2009 மே மாதம் 18ம் திகதி சரணடைந்தவர்களை கொலை செய்தல்இ வடக்கு கிழக்கில் காணாமல் போதல்கள்இ யுத்த சூன்ய வலயங்களின் மீது தாக்குதல் நடத்துதல்இ மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதனை தடுத்தல் உள்ளிட்ட பாரதூரமான பல குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து காரணிகளையும் உண்மை என நாம் ஏற்றுக்கொள்ளாத போதிலும்இ எவராலும் குற்றம் சுமத்த முடியும். விசாரணை நடத்தப்பட வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் ஊடாக அரசாங்கமோ அல்லது நாட்டு மக்களோ பதற்றமடைய வேண்டியதில்லை. இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய உள்ளக விசாரணை நடத்தி சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்படி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் நான் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவேன் என சரத் பொன்சேகா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.