தணிக்கை குழுவினர் பாராட்டிய அதர்வாவின் சண்டிவீரன்!
பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டிவீரன்’. இப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை பாலாவின் பி.ஸ்டுடீயோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .
இப்படம் வருகிற ஆக 7-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 250 முதல் 350 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
எல்லா மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சண்டிவீரன் கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள படம். இந்த படத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
குடும்பத்துடன் கண்டுகளிக்கக்கூடிய படமாக எடுத்ததற்கு தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர் என்றார்.