ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடைகின்றது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் உள்ள பல பெரும்பான்மை கட்சிகள் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானத்துள்ளமையினால் இவ் அறிகுறிகள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகும் புதிய முன்னணிஇ நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட பல கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வெற்றிலைக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிறைவேற்ற வில்லை என்றால் அக் கடமையை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியல் முன்னணியை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.