Breaking News

முதலமைச்சருக்கு எதிராக சத்தியலிங்கம் சதி! மசிவாரா முதல்வர்?(புலனாய்வு செய்தி)

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்
அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் திட்டம் திரைமறைவில் நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறிய வருகின்றது.

அண்மையில் முதலமைச்சர் எதிர்வரும் தேர்தலில் தான் நடுநிலை முடிவை எடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே அந்த அறிக்கை மற்றும் எம்மால்(தமிழ்கிங்டொம் இணையம்) இருதினங்களுக்கு முன்னர் வெளிக்கொண்டவரப்பட்ட முதலமைச்சருடனான நேர்காணல் காணொளி என்பன தமிழரசுக்கட்சியின் விசுவாசிகளுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது.

அதற்காக முதல்வரை கொண்டு அவர் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட வைத்து அவரை பிரச்சாரப்பணிகளுக்கு கொண்டுவரும் பணியினை வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து அறியவருகின்றது.

முதல்வர் அந்த நேர்காணலில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் உள்வீட்டு தகவல்களையும்,தமது உண்மை முகத்தினை தோலுரித்து காட்டிவிட்டதால் தமிழரசுக்கட்சியின் சிலநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாணசபையின் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஒரு சிலருக்கும் கடும் கோபத்தை உண்டுபண்ணியிருப்பதாக தெரிகிறது.

இதற்கு பின்ணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா,சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் செயற்பட்டு வருவதாகவும் அவர்களின் இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தை களமிறக்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

முதலமைச்சர் மறுப்பு அறிக்கை வெளியிடாமலும் பிரச்சாரப்பணிகளில் கலந்துகொள்ளாமலும் இருப்பாரானால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதனூடாக ஏற்கனவே நீண்டகாலமாக முதலமைச்சர் கனவில் இருக்கும் சீ.வி.கே சிவஞானத்தை கொண்டவரும் நோக்கமும் சின்னக்கதிர்காமருக்கு இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக சில இருநாட்களுக்கு முன் வடமராட்சியில் தேர்தல் பிரச்சாரமொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரன் சீ.வி.கே சிவஞானத்தை பார்த்து ”முதலமைச்சர் களை” முகத்தில் தெரிவதாக கூறியதாகவும் அதற்கு சம்மதம் தெரிவிப்பதுபோல சிவஞானம் புன்முறவலோடு அமைதிகாத்ததாகவும் தமிழரசுக்கட்சி உள்வட்டார தகவல்களிலிருந்து அறிய வருகின்றது.

                 முதலமைச்சரை வைத்து அவரோடுசென்று பிரச்சாரம் செய்து வாக்குபெற்றால் போட்டி நிலை இல்லாமல் வென்றுவிடலாம் என நினைத்திருந்த தமிழரசுகட்சி வேட்பாளர்கள் முதல்வரின் அறிவிப்பை அடுத்து பெரும் குழப்பத்திலிருப்பதாகவும் அவர்களின் தொண்டர்கள் சோர்வடைந்திருப்பதாகவும் தெரிகிறது.

அடுத்தது என்ன-

எது எப்படியிருந்தபோதும் முதலமைச்சர் தனது முடிவிலிருந்து பின்வாங்குவதற்கு தயாரான நிலையில் இல்லை என்பதே தற்போதுள்ள நிலையாகும். வெளியாக சில உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சிக்கு விசுவாசமாக காட்டிக்கொள்ளுகின்றபோதும் முதலமைச்சரா? சீ.வி.கே சிவஞானமா? என வருகின்றபோது தமிழரசுகட்சியின் உறுப்பினர்களே முதலமைச்சர் பக்கமே அதிகமானவர்கள் இருப்பதாகவும் அறியவருகின்றது.

முதலமைச்சர் தனது அறிக்கையை மீளப்பெறாதநிலை நீடித்தால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமானால் அவர் ஒருவர்மீது பழியைபோட்டு தமது சரிவை தேர்தலில் சீரமைத்துகொள்ள தமிழரசுக்கட்சி முயன்றுவருவதாகவும் ஆனால் அதற்கெதிராக முதல்வர் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பாராக இருந்தால் தமிழரசக்கட்சியின் ஆயுட்காலமே இந்த தேர்தலுடன் முடிவுக்கு வரும் என்றும் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய முன்னைய பதிவுகள்