Breaking News

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ளது.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவருமான முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன் போது பேசப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக மாத்திரமே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.