Breaking News

சாதனை படைக்கப் போகும் விஜய்யின் புலி படம்?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.அதுமட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, சைனீஸ், ஜப்பானிஸ் ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர்.

3500 திரையரங்குகளில் இப்படம் வெளியானால் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையை ‘புலி’ படைக்கும் என்று கூறப்படுகிறது.