திருக்கேதீஸ்வரத்தில் புதைகுழிக்கு அருகிலுள்ள கிணற்றை ஆராய நீதிமன்று அனுமதி!
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கிணற்றை ஆராய்வதற்கு மன்னார் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த கிணற்றுக்குள் மனித எச்சங்கள் இருக்ககலாம் என்று நம்பப்படும் நிலையில், அவற்றை அகழ்வு செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வேண்டுகோளை மன்று ஏற்றுக்கொண்டது.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி இந்த அகழ்வுப் பணியை ஆரம்பிக்க மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைகுழி கடந்த வருடம் மார்ச் மாதம் வரை முன்னாள் மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்ன தலைமையில் 32 தினங்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 83 மனித மண்டை ஓடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதன் வழக்கு நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள விசேட விசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.ரணசிங்க, உதவி பொலிஸ் பரிசோதகர் கே.தேவர், சார்ஐன்ட் பி.எஸ்.சொய்சா, கே.ஏ.மனோஜ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மன்னார் திருக்கேதீஸ்வர புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என இலங்கையில் பகுப்பாய்வு செய்வதற்கு
பல்வேறு விசாரணைகளைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி நில அளவை அதிகாரிகளைக் கொண்டு நில அளவை செய்வது எனவும் அங்கிருப்பதாகத் தெரிவிக்கப்படும் கிணற்றை புள்ளியிட்டு அது அகழ்வு செய்யப்படும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.