டுவிட்டரில் சாதனை படைத்த ரஜினிகாந்த் !
20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்வதன் மூலம் தமிழ்த் திரையுலகில் வேறு எந்த நட்சத்திரத்திற்கும் இல்லாத அளவிற்கு டுவிட்டரில் அதிகமான தொடர்பாளர்களைக் கொண்டவர் ரஜினிகாந்த்.
எனினும் ரஜினிகாந்த் சில முக்கியமான விஷயங்கள் நடக்கும் போது மட்டுமே டுவிட்டரில் அவருடைய கருத்தைப் பதிவு செய்து வருகிறார். மற்ற நட்சத்திரங்களைப் போல அடிக்கடி அவர் டுவிட்டரைப் பயன்படுத்துவதில்லை.
இது ரஜினியின் ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும் ரஜினிகாந்த் அவருடைய லிங்கா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போதும் வாயைத் திறக்கவில்லை.தற்போது கபாலிபடம் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்திலும் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்.
நேற்று தமிழக முதல்வர் நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்கு ரஜினிகாந்த் டுவிட்டரிலும் தன்னுடைய நன்றியைத் தெரிவத்துள்ளார்.டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த கடந்த ஒரு வருடத்தில் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரண்டாவது முறையாக தமிழில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் கோச்சடையான் பட வெளியீட்டின் போது டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த் அப்போது தன்னுடைய டுவிட்டர் கணக்கிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்ததற்கு தமிழில் முதல் பதிவிட்டார்.
அதன் பிறகு இப்போதுதான் தமிழில் பதிவிட்டுள்ளார்.மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்..” என்று டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.