கோத்தாவுக்கு தடை நீக்கப்பட்டது!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்காலிகமாக வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.காலி துறைமுகத்தில் கடந்த ஜனவரி 18ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர் வெளிநாடு செல்லக்கூடும் என்ற இரகசியப் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்த விரிவான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குற்றம் நடைபெற்றதாக என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக எந்தவொரு குற்றத்தையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சட்டமா அதிபரின் அறிக்கைக்கு அமைய நீதிமன்றத்தில் அறிவித்ததன் படி, நீதிபதியால் கோட்டாபய வௌிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.