Breaking News

றகர் வீரரின் கொலை தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் புதிய தகவல்

பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன், கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் அச்சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. 

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆரோக்கிய பணிகளுக்கு போக்குவரத்து வசதிக்கு உதவி வழங்கும்படி கேட்டு சிரிலிய பவுண்டேசனின் செயலாளரான குமாரி திஸாநாயக்க எமது தலைவருக்கு ஓர் உத்தியோகப்பூர்வ வேண்டுகோளை கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 22 ஜூன் 2011 அன்று இந்த வேண்டுகோள் தொடர்பில் மேல் நடவடிக்கை பற்றி ஆலோசனை வழங்கும்படி அப்போது சமூக நலன்புரி அமைச்சர் பீலிக்ஸ் பெரோராவுக்கு எமது தலைவர் உத்தியோபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பினார். 27 ஜூன் 2011 அன்று முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தனது சம்மதத்தை ஆதரவையும் தெரிவித்தார். மேலும் அவர், சிரிலிய சவியா பவுண்டேசனுக்கு உதவி வழங்குவது இலங்கையில் மிகவும் பாதிப்படைந்த நிலையிலுள்ள மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அரும் வாய்பைபை எனவும் கூறியிருந்தார். 

இதன்படி. WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முதல் பெண் சிராந்தி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 20 ஜனவரி 2015 அன்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் போக்குவரத்து முகாமையாளர் இந்த வாகனத்தை சிரிலிய பவுண்டேசனிடமிருந்து மீளப்பெற்றுக்கொண்டார். ஓகஸ்ட் 2011 இலிருந்து இந்த வாகனம் இவ்வருடம் மீளப்பெறும் வரையிலும் எவ்வாறு பராமரிக்கப்பட்டது, 

என்னென்ன செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட என்பது பற்றி இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறியாது என்று இத்தால் தெரிவிக்கின்றோம். இந்த வாகனத்தின் நிறம் மாற்றம் பற்றி தகவல் வழங்கும்படி குற்றச்செயல் விசாரணை பிரிவு எமது தலைவரிடமும் பணிப்பாளர் நாயகத்திடமும் அறிக்கை தருமாறு கேட்டதற்கு இணங்க தெரிந்த தகவல்கள் அனைத்தையும் வழங்கியது. 

இந்த வாகனம் இப்போதுகுற்றச்செயல் விசாரணைப்பிரிவிடம் உள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் இவ்விடயம் குறித்து துல்லியமான தகவல்களை தொடர்ந்து வழங்கும்.