Breaking News

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கொழும்பில் கூடுகின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளும் கொழும்பில் கூடவுள்ளன.

இந்தக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதோடு, தேர்தலின் பின்னரான புதிய சூழ்நிலைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. ரெலோ நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடி தேர்லில் தமிழ் மக்களின் ஆணை மற்றும் புதிய சூழ்நிலை குறியத்து ஆராய்ந்திருந்தது.

இதற்கு அமைவாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஜனாகருணாகரம், வினோ நோகரராதலிங்கம், கணேசரிங்கம் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தனித்தனியாக ஈழ மக்கள் புரட்சி கரவிடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியோர் சந்தித்துப்பேசினர்.

இச்சந்திப்பில் ஈழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணி சார்பில் சுரேஷ்பிரேமச் சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கந்தையாசர்வேஸ்வரனும் பங்கெடுத்தனர். தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ராகவன் ஆகியோர் பங்கெடுத்தனர். இந்த நிலையில் தேர்தலின் பின்னரான நிலைமை, மக்கள் ஆணை, புதிய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா? இல்லையா? மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தூதுக் குழுக்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கென கொழும்பில் கூடி இக்கட்சிகள் ஆராயவுள்ளன.