புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகா
ஜனநாயக கட்சியின் தலைவரும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
2006ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில், தன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, தான் பயணம் செய்த காரையும் அவர் தேர்தல் பரப்புரைக்காக கொண்டு வந்திருந்தார்.
குண்டுகளால் துளைத்த அந்தக் காரை வைத்து அவர் ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.இன்று அவர் திருகோணமலை நகரசபை மண்டபத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.