இரு தரப்பினாலும் பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாது – சுசில்
இரண்டு தரப்பினாலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான கட்சிகளும் 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது என்ற நிலைப்பாட்டில் உண்மையுண்டு. இம்முறைப் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 25 ஆசனங்களை வரையில் பெற்றுக்கொள்ளக் கூடும்.
இதனால் பிரதான கட்சிகளினால் 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.