மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்
யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில் சாட்சி பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22,23ம் திகதிகளில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திலும் 24,25ம் திகதிகளில் வாழைச்சேனை பிரதேச செயலகத்திலும் சாட்சி பதிவு செய்யப்படவுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 5119 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 21,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.