தேர்தல் முடியும் வரை சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட முடியாது
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்சித் தலைவரின் அனுமதி இன்றி மத்திய குழுவை கூட்ட அனுமதி அளிக்க கூடாது என கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிரசன்ன சோலாங்காராச்சி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை கடந்த ஜூலை 29ம் திகதி பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம்வரை (07) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
மனு இன்று (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஓகஸ்ட் 24ம் திகதிவரை தடை உத்தரவை நீடித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பின் பிரகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டும் அதிகாரம் கட்சியின் தலைவருக்கு உண்டு என பிரசன்ன சோலங்காராச்சி தனது மனுவில் தெரிவித்துள்ளார்