பிரிட்டன் விமானம் 7 பேருடன் விபத்துக்குள்ளானது(காணொளி)
கண்காட்சியில் விமானம் ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு சஸக்ஸில் உள்ள ஏ27 பாதைக்கு அருகாக இந்த ஹவ்கர் ஹண்டர் விமானம் வீழ்ந்துள்ளது.
வானில் கர்ணம் அடித்து வேடிக்கை காட்ட இந்த விமானம் முயற்சித்தபோது, அது அந்த வீதிக்கு மிகவும் நெருக்கமாக வீழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
பலியானவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், மேலும் காயமடைந்த பலர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அம்புலன்ஸ் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
ஏ27 பாதை மூடப்பட்டுள்ளது.
2007இல் இதே விமானக் கண்காட்சியில் இரண்டாம் உலகப்போரின் ஹரிக்கேன் விமானம் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.