உள்ளக விசாரணையை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளுமாம்! சுமந்திரன் தெரிவிப்பு
அனைத்துலக பங்களிப்பு இருக்கும் உள்ளக விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு நேற்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முற்று முழுதான உள்ளக விசாரணையில் நீதி கிடைக்க மாட்டாதெனவும், அது அனைத்துலக மயப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்துடன் அந்த விசாரணையில் அனைத்துலக நிபுணர்கள் கட்டாயமாகத் தொடர்புபட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் இலங்கையில் கண்காணிப்பு அலுவலகம் ஒன்றை அமைக்கவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புமெனவும் சுமந்திரன் தெரிவித்தார்.