Breaking News

காணாமல் போனோரின் உறவுகள் சார்பாக ஐ.நாவுக்கு கடிதம்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி செபமாலை அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழு, யாழ். மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு காணாமல் போனோரின் உறவுகளை தேடும் சங்கம் ஆகியன இணைந்து மனித உரிமைகள் ஆணையாளருக்கு இந்த கடிதத்தை நேற்று அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பான உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் அதனால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செபமாலை அடிகளார் மேலும் கூறினார்.