ஈழக் கனவை நினைவுபடுத்தும் விஜயகலாவை கைது செய்க : நிமல்
மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உடன் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழக் கனவை பயன்படுத்தி அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் நிமல் சிறிபாலடி சில்வா, இது குறித்து பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ஈழ தேசக் கனவை தேர்தல் பிரசார சுவரொட்டியில் காட்சிப்படுத்தி வாக்குகளைக் கவரும் நடவடிக்கையில் பிரதியமைச்சர் விஜயகலா ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக இலங்கை தற்போது பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிர்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.