Breaking News

குடி நீரிற்கும் வரி அறவிட திட்டமா?

தற்போதைய அரசாங்கம் குடி நீரிற்கும் வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

அது தொடர்பான பத்திரம் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்காக சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே இதனைத் தெரிவித்தார்.