Breaking News

நேற்று தபால்மூல வாக்களிப்பு சுமுகம்; இன்றும் வாக்களிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு இன்றும் இடம் பெறவுள்ளது.

முப்படையினர் மற்றும் அரச ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று வழங்கப்படவுள்ளது. இதே வேளை இன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க தவறும் வாக்காளருக்கான விசேட தபால் மூலம் வாக்களிப்பு தினமாக எதிர்வரும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில சம்பவங்களை தவிர நேற்றைய தினம் தபால் மூலம் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம் பெற்றதாக பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகத்தின் தபால் மூல வாக்களிப்பு மத்திய நிலையத்திற்குள் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அத்து மீறி பிரவேசித்தமை மற்றும் சில பகுதிகளில் இடம் பெற்ற சட்டவிரோத தேர்தல் பிரசாரம் என்பன மாத்திரமே நேற்றைய தினம் பதிவாகியதாக பவ்ரல் அமைப்பின் நிறறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொரளை , ஜா எல மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கபட்ட சட்ட விரோத தேர்தல் பிரசாரங்களை தவிர நேற்றைய தினம் சுமூகமாக தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றதாக தேசிய தேர்தல்கள் கண்கானிப்பகத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசங்க ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.