Breaking News

த.தே.ம.முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற தேர்தல் விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு மேற்படி அழைப்பாணை இன்று யாழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ளது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை காலை 9 மணிக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்ட அழைப்பாணை இன்று தபால் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பாக

கடந்த சனிக்கிழமை(01) சாவகச்சேரி பஸ் நிலையத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
எனினும் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி தேர்தல் ஆணையாளரின் கருத்துக்கு அமைய பொது இடங்களில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாத வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கலாம் என்பது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொறுப்பதிகாரியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியிருந்தார்

நீண்ட வாக்குவாதத்துக்கு பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி கைது செய்தவர்களை விடுதலை செய்தார்

அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (02) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் கரும்பலகையில் எழுதியிருந்த நிகழ்ச்சி நிரலையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்

மேலும் கட்சியின் தலைவரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் கூறிவிட்டுச் சென்றனர். திங்கட்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேலைப்பளு நிமித்தம் பொலிஸ் நிலையத்துக்கு செல்ல முடியாது என்பதை உதவியாளர் மூலம் சாவகச்சேரி பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியிருந்தார் எனினும் அழைத்தால் வரவேண்டும் எனவும் இல்லாவிடின் நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை விடப்படும் எனவும் பொறுப்பதிகாரி குறித்த உதவியாளரிடம் தெரிவித்திருந்தார் இந்நிலையில் மேற்படி நீதிமன்ற அழைப்பாணை விடுக்கிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

- See more at: http://www.seithiveechu.com/3165#sthash.HFnixFuF.dpuf