கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சி
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை அமைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை அமைக்க இன்னமும் கால அவகாசம் உண்டு. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னமும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து இதுவரையில் மலிக் சமரவிக்ரம மட்டுமே கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு தரப்பும் இதுவரையில் உரிய கருத்துக்களை வெளியிடவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே இதுவரையில் கருத்து வெளியிட்டுள்ளது.தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.