Breaking News

கோலிக்கு சமிந்த வாஸ் ஆதரவு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் வீராட் கோலியின், ஐந்து பந்து வீச்சாளர் கோட்பாட்டுக்கு இலங்கையின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது பற்றி வாஸ் கூறும்போது, 

“இந்தியா ஆக்கிரோஷமான வகையில் கிரிக்கெட் விளையாடுவது நல்லது தான். உலகத்தில் அனைத்து நல்ல அணிகளும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகின்றன. முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர், விராட் கோலி தலைமையில் இந்திய அணி நல்ல முறையில் உருவாகி வருகிறது. அவர்கள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக விளையாடுவதை நான் விரும்புகிறேன்" என அவர் தெரிவித்தார். 

மேலும் “காலி போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கையை விட்டு போய்விட்டது. ஆனால் அவர்கள் மீண்டும் அதுபோல் நடக்க விடாமல் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுவிட்டனர். இலங்கை மீண்டும் அவர்களை வெல்ல வேண்டுமானால் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்" என்றும் வாஸ் கூறினார்.