ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை!
தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த சர்வதேச அனர்த்தக் குழு ஒன்றில் சிரில் ரமபோசா கடயைமாற்றினார் எனினும், பிரதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தற்போது அந்தப் பதவியில் செரீல் கார்லோஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, என தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஜப்பான் செல்லும் வழியில் இலங்கையில் அவரது விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.