அமெரிக்காவில் ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொலை
அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேரடி நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்தச் செய்தியாளரும் அவருக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தவரும் ஓடினர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவத்தில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர் உயிராபத்து இன்றி தப்பி விட்டதாக அந்த தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டும் என்ன காரணத்திற்காக நடைபெற்றது என்பது தொடர்பில் தெரியவில்லை என தொலைக்காட்சி நிலையத்தில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.