Breaking News

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்கவும்

முன்னாள் அமைச்சர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கை ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்கும் விதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்ற விஷேட நீதிபதிகள் குழு இன்று விடுத்துள்ளது. அதன் பிரகாரம், ட்ரைல் அட் பார் முறையிலான (மூவரடங்கிய நீதிபதிகள் குழு) இவ்வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை தொடர்ந்தும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.