இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப் பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். அரச விடுமுறை நாளான எதிர்வரும் 9ம் திகதி ஞாயிறன்றும் விசேட தினமாகக் கருதி வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலையங்களுக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.