தேசிய அரசாங்கத்தில் இணைகிறார் சமல்
முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வருமான சமல் ராஜபக்ச தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் தான் இணைந்துகொள்வதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதுவித தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு பலம் சேர்க்கும் வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு பலம் சேர்ப்பதற்கு தான் விரும்புவதாகவும், அரசியல் என்பது ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் கட்சித் தலைவரின் முடிவுக்கு மதிப்பளித்து செயற்படவிருப்பதாகவும் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பில் இன்னமும் எதுவித முடிவும் எடுக்கவில்லையெனக் கூறினார்.