அமெரிக்காவின் முயற்சி போர்க்குற்றத்தை மறைத்துவிடும் : கருணாநிதி
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகமும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் இந்த முயற்சி குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முயற்சி சில வேளைகளில் போர்க்குற்றத்தை மறைத்துவிட முடியும் என்று திராவிட முன்னேற்றக்கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனினும் அப்படி இடம்பெறாது என்று தாம் நம்புவதாக அவர் தெ ஹிந்துவுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.