லசந்த கொலை குறித்த விசாரணைகள் ஒத்தி வைப்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த விசாரணைகள் தேர்தல் முடிவடையும் வரையில் ஒத்தி வைக்க்ப்பட்டுள்ளன.
கொலையுடன் தொடர்புடைய முக்கிய உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதனால் விசாரணைகளை தேர்தல் முடியும் வரையில் ஒத்தி வைக்கத் தீர்மானிக்க்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.இந்தக் கொலையுடன் கடந்தஅரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கொலையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.