Breaking News

இறுதிப் பிரசாரக் கூட்டங்களில் பல இரகசியத் தகவல்கள் வெளியாகும்: அனைத்துக் கட்சிகளும் திட்டம்?

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலு க்கான பிரசார நடவடிக்கைகள் முடிவடைவதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் 

களமுனையில் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் எதிர்வரும் நாட்களில் மற்றைய தரப்பு கட்சிகளுக்கு எதிரான பல்வேறு இரகசியத் தகவல்களை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறாக ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு எதிரான தகவல்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தற்போதைய அரசாங்கமான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக பல்வேறு தகவல்களையும் வெளியிடவுள்ள அதேவேளை ஜே.வி.பி.யினர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த தரப்பினர் தொடர்பான பல்வேறு இரகசியத் தகவல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது,

தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னரே பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொளச்ள வேண்டும் என்ற நிலையில் 14 ஆம் திகதி பிரசார நடவடிக்கைகளுக்கான இறுதி தினம் என்பதால் அன்றைய தினம் இந்தக் கட்சிகள் இரகசிய தகவல்கள் பலவற்றை அதிரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

14 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தத் தகவல்கள் தொடர்பாக மற்றைய தரப்பினருக்கு பதிலளிக்க முடியாது என்பதால் மற்றைய தரப்பினருக்குப் பதிலளிக்க முடியாதவகையில் 14 ஆம் திகதி இந்தத் தகவல்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.