லசந்த எக்நெலிகொட கொலையாளிகள் அரசாங்கத்திலா இருக்கின்றார்கள்? மஹிந்த
ஊடகவயிலாளர்களான லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்நெலிகொட ஆகியோரை கொலை செய்தவர்கள் அராசங்கத்திற்கு உள்ளா? இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பிபிசி சந்தேசவிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் ''லசந்தவை கொலை செய்ததது இவர்தான் என குறிப்பிடுகின்றார்'' அவ்வாறு என்றால் ஏன் அவர்களை கைது செய்யவில்லை. தேசிய அரசாங்கம் தூக்கத்திலா இருக்கின்றது? இது குறித்து எனக்கு மெய்யான சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.