தோல்விக்கு மஹிந்தவே காரணம்! - ஜயரத்ன ஹேரத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு, வெற்றி பெற்றிருக்க முடியும் என, குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.
குருநாகல் - வதுராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டமையினாலேயே எதிர்பார்த்தளவில் வெற்றி பெற முடியாமல் போனதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ சிலரை மட்டுமே கவனித்ததாகவும், அவரது குடும்பம் ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே குருநாகலில் அவர் போட்டியிட்டதாகவும் ஜயரத்ன ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டது மஹிந்தவின் செயற்பாடுகளாலேயே எனவும் அவர் கூறியுள்ளார்.