மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை
அனைத்துலக சமூகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
கொழும்பைத் தளமாக கொண்ட அனைத்துலக இராஜதந்திரிகளைஇலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அனைத்துலக சமூகம் தற்போது, மனித உரிமைகளை வைத்தே இலங்கையுடனான உறவுகளில் முடிவெடுக்கின்ற நிலையில் இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்களுக்குத் தீர்வு காணும், அரசியல் கலாசாரத்தை மாற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறமுடியும்.உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குதல், அமைதியைக் கட்டியெழுப்புதல், மீளக்குடியமர்த்துதலுக்கான நிபுணத்துவ உதவிகளை அனைத்துலக சமூக