Breaking News

மகஸினிலுள்ள 80 பேரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு முன்னிலையில் ஆணைக்குழு விசாரணை

மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 80 பேரிடம் பயங்­க­ர­வாதப் பிரி­வி­னரின் முன்­னி­லையில் காணாமல் போனோரைக் கண்­ட­றியும், 

மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஆணைக்­குழு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆணைக்­கு­ழுவின் இவ்­வா­றான செயற்­பாடு எவ்­வாறு நீதியை வழங்கும் என கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் பரப்­புரைக் கூட்டம் நீர்­வே­லியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதன்­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­காக இலங்கை அர­சாங்கம் ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்­தது. இந்த ஆணைக்­குழு பல்­வேறு இடங்­களில் சாட்­சி­யங்­களைப் பதிவு செய்­தது. அவ்­வா­றி­ருக்­கையில் அண்­மையில் இந்தக் குழு­வுக்கு யுத்தக் குற்­றங்கள் தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்­கான ஒரு அதி­கா­ரமும் வழங்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் கடந்த மூன்று தினங்­க­ளாக மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 80 பேரிடம் ஆணைக்­குழு விசா­ரணை செய்­தது.

குறிப்­பாக இந்த விசா­ர­ணை­யின்­போது குறித்த 80 பேரிடம் ஏற்­க­னவே விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரும் அங்கு அமர்ந்­தி­ருந்­துள்­ளனர். ஒரு ஆணைக்­குழு தனது விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும்­போது ஏற்­க­னவே விசா­ரணை செய்த இவ்­வா­றான புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அங்கு வர­வேண்­டிய தேவை என்ன?

இவர்கள் அவ்­வி­டத்தில் இருப்­பதன் மூலம் அந்த நபர்கள் சுயா­தீ­ன­மான கருத்­துக்­களை முன்­வைக்கக் கூடிய சூழல் காணப்­பட்­டி­ருக்­குமா? என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும்.

அதே­நேரம் இந்த விசா­ர­ணை­யின்­போது முக்­கி­ய­மான இரண்டு விட­யங்­கள் கூறப்­பட்­டி­ருக்­கின்­றன. அதா­வது காணாமல் போனோர் என்று இங்கு யாரும் இல்லை. உங்­க­ளு­டைய உற­வி­னர்கள் வெளி­நா­டு­களில் சென்று தலை­ம­றை­வாக வாழ்­கி­றார்கள். இன்னும் சிலர் இரண்­டா­வது திரு­மணம் முடித்து ஒளிந்து வாழ்­கி­றார்கள். ஆகவே காணாமல் போனோர் என நீங்கள் கூறு­வது பொய்­யா­னது என்றும் கூறி­யி­ருக்­கின்­றார்கள். ஆகவே நியா­ய­மான விசா­ரணை ஒன்றை இவ்­வா­றான ஆணைக்­கு­ழுக்­க­ளி­ட­மி­ருந்து நாம் எதிர்­பார்க்க முடி­யா­தென்­ப­தற்கு இது நல்ல உதா­ர­ண­மாக அமை­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான சிந்­த­னை­யைக்­கொண்ட இவ்­வா­றான ஆணைக்­கு­ழுக்­களின் அதி­கா­ரி­களால் எவ்­வாறு ஒரு நியா­ய­மான விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என நாம் எதிர்­பார்க்­க­மு­டியும்.

இந்த விசா­ர­ணைக்­கு­ழுக்கள் தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுத் தருமா என்­பதும் பெரு வினா­வா­கின்­றது. இந்த விட­யத்தை நாம் சரி­யாகப் புரிந்து கொண்டு சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது.

ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­படும் எந்­த­வ­கை­யி­லான ஆணைக்­கு­ழு­வாக இருந்­தாலும் அது தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான நீதியைப் பெற்றுக் கொடுக்­காது. எனவே யுத்தக் குற்­றங்­க­ளாக இருக்­கலாம். மனித உரிமை மீறல்­க­ளாக இருக்­கலாம். இன்னும் நாம் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகள் தொட-ர்பிலாக இருக்கலாம் இவற்றுக்குத் தீர்-வைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச விசா-ர-ணையே அவசியம். உள்ளக விசா-ர-ணையையோ அல்லது சர்வதேச தரத்தி-லான உள்ளக விசாரணையையோ எம்-மால் ஒருபோதும் ஏற்கமுடியாது. தமி-ழ்த் தேசி-யக் கூட்டமைப்பு அதனை ஒரு-போதும் அங்கீக-ரிக்காது என்றார்.