கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இன்று சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைமை தொடர்பில் ஆராயுமுகமாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் இன்று கொழும்பில் கூடிப் பேசவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.
தேர்தலுக்குப் பின்னான சூழ்நிலையில் கூட்டமைப்பை வைத்து தமிழரசுக் கட்சி தன்னைப் பலப்படுத்த ஏனைய கட்சிகளைப் புறக்கணித்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், மூன்று கட்சிகளும் கூடவுள்ளன.
இதன்போது தமிழ்க் கூட்டமைப்பை பதிவுசெய்வது, வேறு கட்சிகளை இதில் இணைப்பது மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டு இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.