Breaking News

இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும்! பான் கீ மூன்

இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசி ஊடாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவை, பான் கீ மூன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஈட்டிய வெற்றிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவான எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றமை மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை ஆகியன வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீண்ட கால சமாதானத்தை நிலைநாட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பான் கீ மூன், பிரதமர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிய அரசாங்கத்திற்கு உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.