Breaking News

தமிழரசுக் கட்சி மீது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இல்லத்தில் நேற்று  மாலை நடைபெற்றது.

உலகத் தமிழர்களின் உண்மைகளை அறிய வேண்டும் என்னும் நோக்குடன் உண்மைகள் மறைக்கப்படக் கூடாது என்பதற்கிணங்க இவ் ஊடகவியாலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இவ் ஊடகவியாலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர்.