அற்ப சலுகைகளுக்கு அடிபணிய மாட்டோம் : யோகேஸ்வரன்
நீங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுக்கப்போகின்றீர்களா என்றுபலர் வித்தியாசமாக எங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். அவ்வாறு எடுக்க வேண்டுமாக இருந்தால், எங்கள் நோக்கத்தை நாங்கள் முதலில் மறக்க வேண்டும்.
நாங்கள் எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வரையில் எவ்விதமான சலுகைகளுக்கும் அடிபணிய மாட்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்.
ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஏறாவூர், நான்காம் வட்டாரம் பகுதியிலுள்ள கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எஸ். யோகேஸ்வரன், எஸ். வியாலேந்திரன் மற்றும் ஞானமுத்து ஶ்ரீநேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.