ஜனாதிபதியின் கீழ் நான்கு அமைச்சுப் பொறுப்புக்கள்
சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், புதிய அரசாங்கத்தில் அமைச்சரவையில் அமைச்சர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி கொண்டுள்ளது.
அமைச்சரவையை 30 பேருக்குள் மட்டுப்படுத்துவதற்கு உறுதியளித்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்குஇ பெரும்பான்மை கிடைக்காமையினால் அதனை நிறைவேற்றிகொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.