Breaking News

தேர்தல் கண்காணிப்பிற்கு சமூக வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்

எதிர்வரும் காலங்களில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் சமூக ஊடக வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முகநூல் மற்றும் சமூக வலையமைப்பு இணைய தளங்களின் செயற்பாட்டாளர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு ஒரு சமூக வலையமைப்பு செயற்பாட்டாளர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு மேலதிகமாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கக் கூடிய ஒருவரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.சமூக ஊடக வலையமைப்புக்களின் செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.